• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபாசமாக விமர்சித்த நெட்டிசன் – அதிரடி பதிலளித்த ஓவியா !

April 30, 2019 தண்டோரா குழு

விமலின் களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதன் பல்வேறு படங்களில் அவர் நடித்திருந்தாலும் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தை பிடித்துள்ளார்.

தனக்கான வழியில் பயணிப்பேன் என்று மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வரும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு 90 எம்.எல் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில், ஓவியா நேற்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் ரசிகர்களிடையே உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஓவியாவை ஆபாசமாக விமர்சித்தார். அதற்கு பதிலளித்த ஓவியா, அந்த ரசிகர் கூறிய அதேவார்த்தையை அவரது தாயுடன் சம்பந்தப்படுத்தி அதிரடியாக பதில் பதிவிட்டார்.

ஓவியாவின் துணிச்சலான இந்த நடவடிக்கைக்கு ஒருசிலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் ஒருசிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க