• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் ஜெயலலிதாவாக உருவம் பெரும் கங்கனா ரணாவத் !

September 21, 2019 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

இப்படத்தில் அவர் ஜெயலலிதாவின் இளமைக் காலம் முதல் முதுமை பருவம் வரை நான்கு விதமான தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளார். இதற்காக தமிழ் மொழி உச்சரிப்புக்கு பயிற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார்.மேலும், இப்படத்தில் கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிளேட் ரன்னர், கேப்டன் மார்வெல் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர்.

இந்நிலையில், ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கங்கனா சென்றுள்ளார். லுக் டெஸ்ட் புகைப்படங்களை கங்கனா ரனாவத்தின் குழு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

மேலும் படிக்க