 April 29, 2017
April 29, 2017  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                2007ஆம்ஆண்டு அஜீத்,அசின் நடிப்பில் வெளிவந்த ‘ஆழ்வார்’ படத்தை இயக்கியவர் ஷெல்லா. தற்போது இந்தப் படம் ரிலீஸாகி 10 வருடங்களுக்கு மேலாகிறது. 
இந்நிலையில், சமீபத்தில் அஜித பற்றி ஷெல்லா கூறும்போது,
“நான் எஸ்.ஜே.சூர்யாவிடம் ‘வாலி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போதிலிருந்தே எனக்கு அஜீத் சாரை தெரியும். ‘ஆழ்வார்’ படத்தின் கதையை விவரித்தபோது, அவருக்கு பிடித்துப் போனதால் உடனே ஓகே சொன்னார். அவர், தமிழக மக்களுடைய ஆழ்வார்.
அவரை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டுமென தினம் தினம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன். என் பட ரிலீஸின்போது கடைசியாக அவரைப் பார்த்தது. கடந்த 10 வருடங்களாக மறுபடி அவரைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்”  எனக் கூறியுள்ளார்.