• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயர் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு 13-ந்தேதி வெளியாகிறது தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் தகவல்

July 11, 2016

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு 13-ந்தேதி(புதன்கிழமை) வெளியிடப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.

189 இடங்கள் தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் டி.எம்., எம்.சி.எச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர 189 இடங்கள்(82+107) உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் கடந்த 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தப் படிப்பில் 50 சதவீத அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீதம் பிற மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, 50 சதவீதம் அரசு மருத்துவர்கள் அல்லாத மீதமுள்ள இடங்களில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

எத்திராஜ் கல்லூரியில் நடந்தது உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்தப் படிப்புகளுக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்காக 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் மருத்துவ படிப்புகளான டி.எம்., எம்.சி.எச்.

ஆகியவற்றில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது. தமிழகம் முழுவதுக்கும் ஒரே ஒரு மையம் இது மட்டும்தான். மொத்தம் இந்தப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத 733 பேர் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. இந்தத் தேர்வை கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குநரும், மருத்துவ தேர்வுக்குழு செயலாளருமான ஜி.செல்வராஜன் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- 13-ந்தேதி தேர்வு முடிவு வெளியீடு நுழைவுத்தேர்வை மொத்தம் 733 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் 610 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 123 பேர் பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள். இன்று (நேற்று) நடைபெற்ற இந்தத் தேர்வில் 56 பேர் பங்கேற்கவில்லை. இந்தத் தேர்வு முடிவுகள் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து www.tnh-e- a-lth.org என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். நுழைவுத்தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் கூறும்போது, ‘அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீதங்கள் இடங்கள் போக, மீதமுள்ள 50 சதவீத இடங்களில் தற்போது வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கி இருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இவ்வளவு ஆண்டுகள் இல்லாத சட்டத்தை தற்போது மாற்றி அமைத்து இருப்பது நியாயமில்லை’ என்றனர்.

மேலும் படிக்க