• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் பேரூராட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் மறைமுக வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

March 4, 2022 தண்டோரா குழு

வெள்ளலூர் பேரூராட்சியில்மறைமுக தேர்தல் நடத்துவதற்கான பணியின்போது வருகை புரிந்த வார்டு உறுப்பினர்களால்,மறைமுக தேர்தல் நடத்த முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த தொடர்வதற்கான மறைமுக தேர்தல் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை நடைபெற இருந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றனர்.இந்நிலையில் 15வது வார்டு வேட்பாளர் வெள்ளலூர் யூ.மருதாசலம் தலைவராக போட்டியிட்டார். இதற்கான மறைமுக தேர்தல் மெலனூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று,தற்போது திமுகவில் இணைந்த 11வது வார்டு வேட்பாளர் கனகராஜீ மற்றும் திமுக 5வது வார்டு வேட்பாளர் காளீஸ்வரி உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் மறைமுக தேர்தல் இடத்திற்கு வந்தனர். அப்போது அ.தி.மு.க- தி.மு.க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேட்பாளர் கனகராஜீ மறைமுக தேர்தல் நடக்கும் தேர்தல் பெட்டியை தட்டி விட்டார். தி.மு.க. வேட்பாளர் காளீஸ்வரி தன்னை அதிமுக வேட்பாளர் திட்டியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் அலுவலக வளாகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் உமா,உதவி கமிஷனர்கள் சதிஷ்,ரகுபதி ஆகியோர் விரைந்து வந்து பேசினர்.தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேகர், ஆல்பர்ட்,மற்றும் வேள்ளலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மறைமுக தேர்தல் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பதாக போவதாக அறிவித்து அதற்கான நோட்டீசை அலுவலகம் முன்பு ஒட்டினர்.

மேலும் படிக்க