• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி ஐ பவுண்டேஷன் சார்பாக மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை இலவச பரிசோதனை

March 4, 2022 தண்டோரா குழு

கண் பார்வையில் முக்கிய குறைபாடாக கருத்தப்படும் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயைக் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ,கண் பார்வை இழப்பை தடுக்க தி ஐ பவுண்டேஷன் சார்பாக அதன் அனைத்து கிளைகளிலும் மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை இலவச பரிசோதனை செய்யப்படும் என்று அம்மருத்துவமனையின் இயக்குனர், டாக்டர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனையான தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராமமூர்த்தி,

உலக முழுவதும் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் குறித்த உலக குளுக்கோமா வாரம் கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, தி ஐ பவுண்டேஷன் சார்பில் குளுக்கோமா வாரம் கொண்டாடப்படும் என்றும், அந்த வாரத்தில் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயைக் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ,கண் பார்வை இழப்பை தடுக்க தி ஐ பவுண்டேஷன் சார்பாக பொதுமக்களுக்கு, மருத்துவமனையின் அதன் அனைத்து கிளைகளிலும் மார்ச் 7 முதல் 13 ஆம் தேதி வரை இலவச பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக குளுக்க்கோமா வாரம் கொண்டாப்படுவதும் குறித்தும் ,அந்த நோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு தி ஐ பவுண்டேஷன் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க