• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறிய பெரிய நிறுவனங்களுக்கு ஒரே விலை பட்டியலை அமுல்படுத்த வேண்டும் – விக்ரம ராஜா

March 3, 2022 தண்டோரா குழு

வணிகர்களை காப்பாற்றும் வகையில் சிறிய பெரிய நிறுவனங்களுக்கு ஒரே விலை பட்டியலை அமுல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரம ராஜா கூறியுள்ளார்.

கோவை இரயில் நிலையம் அருகே வணிகர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாக, 39 வது வணிகர் தின மாநில மாநாடு,திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த மாநாட்டில் கடல் போன்று மக்கள் கூட வேண்டும் என்று அனைத்து மாவட்ட, மற்றும் மண்டலங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆட்களை அங்கு வரவழைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் ஒரு பகுதியாக இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் வாயிலாக, நடைபெற உள்ள மாநாட்டில் 15,ஆயிரம் வணிகர்களை ஒன்று திரட்டி மாபேரும் மாநாடாக நடத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரவித்தார்.இந்த மாநாட்டின் வாயிலாக கலந்து கொள்ளும் தமிழக முதல்வரிடத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும், தெரிவித்தார்.

தொடர்ந்து இறந்து போன வணிகர்களுக்கு தலா நபர் ஒன்றுக்கு மத்திய அரசிடம் 10லட்சம் இழப்பீடு கேட்டுள்ளதாக தெரிவித்த அவர் வனிகர்களை ஒன்றுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் பெரிய நிறுவனங்களால் சிறிய வியாபாரிகளின் தொழில்கள் நளிவடைந்துள்ளதாகவும் இதனால் சிறிய பெரிய நிறுவனங்களுக்கு ஒரே விலையை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க