• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஷாவில் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ‘யக்‌ஷா’ திருவிழா

March 3, 2022 தண்டோரா குழு

மஹாசிவராத்திரியையொட்டி கோவை ஈஷாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘யக்‌ஷா’ கலை திருவிழா (மார்ச் 2) சிறப்பாக தொடங்கியது.

முதல் நாளான நேற்று சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் கர்நாடக இசை கலைஞர் அபிஷேக் ரகுராம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன் ஹெச். என். பாஸ்கர் அவர்கள் வயலினும், அனந்த கிருஷ்ணன் மிருதங்கமும் இசைத்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது,யோகம் நாகஸ்வாமி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அபிஷேக் அவர்கள் நியூயார்க், லண்டன், சிங்கப்பூர், பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் முக்கிய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடிய சிறப்புமிக்கவர்.

பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களை மக்கள் ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் இந்த யக்‌ஷா கலை திருவிழா 3 நாட்கள் தினமும் இரவு 7 மணிக்கு ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது.மார்ச் 3-ம் தேதி வித்வான் குமரேஷ் மற்றும் விதுஷி ஜெயந்தி குமரேஷ் வயலின் நிகழ்ச்சியும், மார்ச் 4-ம் தேதி புன்யா டான்ஸ் கம்பெனியின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தினமும் ஆதியோகி திவ்ய தரிசனமும் நடக்கும்.இந்நிகழ்ச்சிகளை Sadhguru Tamil யூ- டியூப் சேனலில் இணையதளம் வாயிலாக கண்டு களிக்கலாம்.

மேலும் படிக்க