• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு

March 2, 2022 தண்டோரா குழு

கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர். மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களில் தேர்வு செய்யப்பட்ட 100 கவுன்சிலர்களில் 39 பேர் பட்டதாரிகள் ஆவர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்தது.இதில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில், 372 பெண் வேட்பாளர்கள் ஆவர். வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றனர். அதன்படி, மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது.

மேலும், அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில்,மாநகராட்சி 100 வார்டுகளில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு கூட்டம் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் காலை 10 மணியளவில் நடந்தது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.மேலும், பதவியேற்ற கவுன்சிலர்களில் 3 பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவர். இதில், 97-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி இளம் வயது கவுன்சிலர் ஆவார். இவரின் வயது 22 ஆகும்.

மேலும், வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் சராசரி வயது 47-ஆக உள்ளது.இது தவிர, 25 கவுன்சிலர்கள் இளநிலை பட்டப்படிப்பும், 13 கவுன்சிலர்கள் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளனர்.ஒருவர் பி.எச்.டி., முடித்துள்ளார்.மேலும், 54 பேர் பிளஸ்-2 அல்லது அதற்கும் குறைவான கல்வி அறிவை பெற்றுள்ளனர்.7 கவுன்சிலர்கள் அடிப்படை கல்வி பெறாதவர்கள் ஆவர். 55 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.

மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வரும் 4-ம் தேதி நடக்கிறது. இந்த மறைமுக தேர்தல் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மாநகராட்சி விக்டோரிய ஹாலில் நடக்கிறது.

மேலும் படிக்க