கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டம் பேரூர் வட்டம் போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா 28ம் தேதி (நேற்று) முதல் வரும் 2ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன், கூடுதலாக 10 தண்ணீர் தொட்டிகள் பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதிகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் நாட்களில் பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக மொபைல் டாய்லெட் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மருத்துவ முகாம் வசதி மற்றும் தேவையான பேருந்து போக்குவரத்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சாலையின் இருபுறங்களில் மண்களால் சமம்ப்படுத்த வேண்டும்.குப்பைகளை அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் பேரூராட்சிகள், ஊராட்சித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார்நிலையில் நிறுத்தி வைக்கவேண்டும். திருக்கோயில்களில் விழா நாளான்று பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ளவும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக தடையில்லா மின் விநியோகம் செய்ய மின்சாரவாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவிழா நாட்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.வனத்துறை சார்பில் மலை மேல் ஏறும் நபர்களின் பாதுகாப்பு வசதிகளை கருத்திற்கொண்டு, வயர்லெஸ் வசதி மற்றும் மலை மேல் மருத்துவ முகாம் அமைக்கவும், மலைவாழ் மக்களை கொண்டு மலை ஏறுபவர்களுக்கு குழுக்கள் அமைத்து உதவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்