• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்ரைனில் உள்ள‌ ம‌க‌ளை மீட்டுவ‌ர‌க்கோரி பெற்றோர்க‌ள் க‌ண்ணீர் ம‌ல்க‌ மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிட‌ம் ம‌னு

February 28, 2022 தண்டோரா குழு

கோவை மாவ‌ட்ட‌ம் தொண்ட‌முத்தூர் ப‌குதியில் வ‌சித்து வ‌ருப‌வ‌ர் செல்வ‌ராஜ் இவ‌ர் கோவிலில் அர்ச்ச‌க‌ராக உள்ளார்.இவ‌ருடைய‌ ம‌க‌ள் ஐஸ்வ‌ர்யா உக்ரைனில் petro mohyla black sea national university க‌ல்லூரியில் 4 ஆம் ஆண்டு ம‌ருத்துவ‌ம் ப‌டித்து வ‌ருகிறார். உக்ரைனில் போரின் கார‌ணமாக‌ நாடு திரும்ப‌ முடியாம‌ல் உள்ளார்.

ச‌ரியான‌ உண‌வு கிடைப்ப‌தில்லை என்றும் ,குண்டு ச‌த்த‌ம் அருகில் உள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ளில் கேட்டுக்கொண்டே உள்ள‌து என்றும் அங்கு இருப்ப‌த‌ற்கு ப‌ய‌மாக‌ உள்ள‌தாக‌வும் ஐஸ்வ‌ர்யா கூறியுள்ளார்.இந்நிலையில்,ஐஸ்வர்யாவின்
பெற்றோர்க‌ள் உக்ரைனில் உள்ள‌ ம‌க‌ளை உட‌னடியாக‌ மீட்டுவ‌ர‌க்கோரி க‌ண்ணீர் ம‌ல்க‌ கோவை மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் ஜி எஸ் ச‌மீர‌ன்யிட‌ம் ம‌னு அளித்துள்ளன‌ர்.

இதேபோல‌ கோவை இடிக‌ரை ப‌குதியில் உள்ள‌ ச‌ர‌த்ச‌ந்திர‌ன் என்ப‌வ‌ர் உக்ரைனில் 4 ஆம் ஆண்டு ம‌ருத்துவ‌ம் ப‌டித்துவ‌ருகிறார். உக்ரையில் த‌லைந‌க‌ர் ப‌குதியில் உள்ள‌தாக‌வும் அங்குள்ள‌ ப‌துங்கு குழிக‌ளில் உண‌வு க‌ர‌ன்ட் போன்ற‌ வ‌ச‌திக‌ள் இன்றி அங்கு உள்ள‌தாக‌வும் உட‌னாடிய‌ த‌ன‌து ம‌க‌னை மீட்டுவ‌ர‌க்கோரி அவ‌ருடைய‌ அப்பா ராமச்ச‌ந்திர‌ன் மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ரிடம் ம‌னு அளித்துள்ளார்.

மேலும் படிக்க