• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது

February 25, 2022 தண்டோரா குழு

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, ‘ரவுடி பேபி’ சூர்யா,வை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்.

மதுரை, திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி,என்ற ரவுடி பேபி சூர்யா 35. திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும், ‘யுடியூப்’ சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கையாக வந்துள்ளது.

இவரது நண்பரான சிக்கந்தர்ஷாவும், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மதுரையில் இருந்த இருவரையும் கடந்த மாதம் 4ஆம் தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா, மீது தமிழகம் முழுதும் புகார்கள் இருப்பதாக, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே சில இடங்களில் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.இந்த விபரங்களை சேகரித்து வந்த போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரைபடி ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க