• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பலத்த பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

February 20, 2022 தண்டோரா குழு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 2303 மையங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் பத்திரமாக முகவர்கள் முன்னிலையில் அடுக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜன், தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களை அரசியல்கட்சி, சுயட்சை உள்ளிட்ட முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர்.

இதேபோல் மதுக்கரை தொண்டாமுத்தூர் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டது.

மேலும் படிக்க