• Download mobile app
31 Oct 2025, FridayEdition - 3551
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை

December 23, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்திய குழு தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச. 23) வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வர்தா புயல் டிசம்பர் 12 ம் தேதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்யவும், மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 22 ஆயிரத்து 573 கோடி நிவாரண நிதி தேவை என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டிசம்பர் 19ம் தேதி நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீண் வசிஷ்டா தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க