• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித் – ஹெச்.வினோத் கூட்டணியில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

February 16, 2022 தண்டோரா குழு

நேர்கொண்டபார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார், ஹெச்.வினோத் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்
இப்படம் வரும் ஜனவரி 13 –ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல்
காரணமாக வலிமை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக போனி கபூர் போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் AK61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹதராபாத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க