• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமர்ஷியலாக இருக்கும் பொழுது சில நெகடிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான் – கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி

February 16, 2022 தண்டோரா குழு

இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள FIR திரைப்படத்தின் குழுவினர் இயக்குனர் மனோ ஆனந்த், நடிகர் விஷ்ணு விஷால்,, நடிகை ரெபா மோனிகா ஆகியோர் இன்று கோவை கேஜி தியேட்டருக்கு வருகை புரிந்தனர். தொடர்ந்து அங்குள்ள பார்வையாளர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷ்ணு விஷால்,

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவிற்கு பிறகு பொதுமக்கள் திரை அரங்கிற்கு வருகை புரிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.இந்த படத்தில் மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை எனவும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

ஓடிடி, அல்சோ படங்களை பொறுத்தவரை திரையரங்குகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. அதில் பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவது நல்லது தான் எனினும் திரையரங்கிற்கான வரவேற்பு என்றும் குறையாது என தெரிவித்தார்.என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வியாபாரம் தான் என தெரிவித்த அவர் அதனை கமர்ஷியலாக இருக்கும் பொழுது சில நெகடிவ் விமர்சனங்கள் வருவது இயல்புதான் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க