சூலூரில் காதல் மனைவி கர்ப்பமானதில் சந்தேகமடைந்த மருமகன் மாமியாரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் கண்ணம்பளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால், கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி செல்வி மற்றும் மகள் காயத்திரி (22) ஆகியோருடன் வசித்து வருகிறார்.கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்வி அதே பகுதியைச் சேர்ந்த லாண்டரி கடை வைத்து நடத்தி வரும் ராமசாமி என்பவரது மகன் ஜீவானந்தம் (21), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில்,காயத்திரி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.காதல் மனைவியின் கர்பத்தில் சந்தேகமடைந்த ஜீவானந்தம் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால்,காயத்திரி தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்,இன்று அதிகாலை 3 மணியளவில் மனைவி காயத்திரி வீட்டிற்குசென்ற ஜீவானந்தம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய மாமியார் செல்வி, விடிந்த பின் வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என
கூறியுள்ளார்.
இதைக் கேட்காத ஜீவானந்தம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியார் செல்வியை தலை, முகம் மற்றும் கைகளில் சரமாறியாக வெட்டியுள்ளார்.இதில்செல்வியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, ரத்தவெள்ளத்தில் செல்வி கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் மறைந்திருந்த ஜீவானந்தத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சொந்த மாமியாரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு