• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

February 12, 2022 தண்டோரா குழு

கோவை பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.அதில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 3 காட்டு யானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து குழை தள்ளிய வாழை மரங்களை தின்றுள்ளது.

அதில் ஒரு ஆண் யானை தோட்டத்தில் போடப்பட்டுள்ள மின் கம்பியை துதிக்கையில் பிடித்தவாறு மேட்டில் ஏற முயன்றுள்ளது.இதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர்.தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இறந்த இந்த ஆண் சுமார் 12 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்னர்.கடந்த 4 நாட்கள் முன்பு பெரியதடாகம் பகுதியில் ஒரு பெண் யானை நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனலிக்காமல் இறந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க