தமிழ்நாட்டில் காவல்துறைக்கு உதவும் வகையில் ஊர் காவல் படை 1963-இல் துவக்கப்பட்டது. போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும்,அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஊர்காவல் படையில் ஆர்வமுடன் இளைஞர்களும், பெண்களும் தங்களை இணைத்து வருகின்றனர்.இந்த நிலையில்,தமிழகத்தில் முதல்முறையாக
கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்று திருநங்கைகள் இணைந்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட ஊர்காவல் படை பிரதேச தளபதி பாலாஜி ராஜு கூறுகையில்,
கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் இணைந்து பணியாற்ற 15 திருநங்கைகள் ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 15 பேரில் தகுதி வாய்ந்த வர்ணா ஸ்ரீ ,மஞ்சு,சுசித்ரா பன்னீர் செல்வம் என்ற மூன்று திருநங்கைகளும் தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாவட்ட ஊர்காவல் படைக்கு தேர்வாகியுள்ளனர் என்றார்.
இந்நிலையில்,ஊர்காவல் படைக்கு தேர்வாகிய 3 திருநங்கைகளும் மாவட்ட ஊர்காவல் படை பிரதேச தளபதி பாலாஜி ராஜுவுடன்
கோவை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.பி சிறப்பாக பணியாற்ற அறிவுறுத்தினார்.
வர்ணா ஸ்ரீ மேட்டுப்பாளையம் யூனிட்டிலும், மஞ்சு பேரூர் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிலும், சுசித்ரா செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிலும் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு