மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை 16 வது வார்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என பா.ஜ.க.சார்பாக 16 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் வினோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்திக்கிறது.இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சி 16 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக வினோ போட்டியிடுகிறார்.
இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் அடிப்படை தேவைகள் சரியான முறையில் வார்டுகளில் நிறைவேற்றப்படவில்லை என கூறிய அவர்,கடந்த கொரோனா கால நெருக்கடி நேரங்களில் வார்டு மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியதாக தெரிவித்தார்.
இதனால் தாம் பிரச்சாரம் செல்லும் இடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.குறிப்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை வார்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதியளித்தார். பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் மைதிலி உடனிருந்தார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு