• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளியபடி சென்று வாக்கு சேகரித்த 46 வது வார்டு பாஜக வேட்பாளர்

February 9, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் 46 வது வார்டில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளியபடி சென்று, காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இரத்தனபுரி பகுதியில் மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளிபடி சென்று, காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பாஜக வெற்றி பெற்றால் மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதேபோல மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

மேலும் படிக்க