• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திறந்தவெளி அரங்குகளில்‌ 50 சதவீதம்‌ நபர்கள் மட்டுமே பிரச்சார பொதுக்கூட்டத்தில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌

February 8, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஹர் சஹாய் மீனா தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அரசியல்‌ கட்சிகளின்‌ பேரணிகள்‌, பாத யாத்திரைகள்‌, வாகன ஊர்வலம்‌, அரசியல்‌ கட்சிகள்‌ மற்றும்‌ தகுதியான வேட்பாளர்கள்‌ தொடர்பான பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால்‌ தேர்வு செய்யப்பட்ட திறந்தவெளி அரங்குகளில்‌ 1000 நபர்கள்‌ அல்லது அதனுடைய கொள்ளளவில்‌ 50 சதவீதம்‌ இதில்‌ எது குறைவோ அந்த அளவிற்கு மட்டுமே நபர்கள்‌ பிரச்சார பொதுக்கூட்டத்தில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி துணை இயக்குநர்‌ சான்று பெற்று உள்‌அரங்குகளின்‌ 500 நபர்கள்‌ அல்லது அதனுடைய கொள்ளளவில்‌ 50 சதவீதம் இதில்‌ எது குறைவோ அந்த அளவிற்கு மட்டுமே நபர்கள்‌ பிரச்சார பொதுக்கூட்டத்தில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.தேர்தல்‌ பிரச்சார பொதுக்‌கூட்டத்தில்‌ கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்‌ கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ அல்லது அவரால் நியமிக்கப்படும்‌ அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்‌.

தேர்தல் கூட்டங்கள் நடத்திட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறவேண்டும். மேலும் காலை 8.00மணி முதல் இரவு 8.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். மேலும் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய கட்சி பிரமுகர்கள் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் மீறல், பணம் மற்றும் பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் செல் – 90033 72229 மற்றும் மாவட்ட தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌.0422-2300116, 0422-2300119, கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்‌. 0422-2300132 – ஆகியவற்றிற்கு தெரிவிக்கலாம்‌.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயசந்திரன், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க