• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகைப்பட்டறை ஊழியர் மீது கிரிக்கெட் ஸ்டம்பால் தாக்குதல் சிறுவன் உட்பட 2 பேர் கைது

February 8, 2022 தண்டோரா குழு

கோவையில் முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் நகைப்பட்டறை ஊழியரை கிரிக்கெட் ஸ்டம்பால் தாக்கிய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் வேடபன்னாடி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(21). இவர் கோவையில் உள்ள நகைப்பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்,நேற்று தினேஷ்குமார் வேலை முடிந்து தனது நண்பர்கள் சிலருடன் சுண்டாக்காமுத்தூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை கிரிக்கெட் ஸ்டம்ப் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இது குறித்து தினேஷ்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர்.அதில், தினேஷ்குமாருக்கும், அவர்களுக்கிடையே முன் விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட குனியமுத்தூர் போயர் தெருவை சேர்ந்த தருண்(21),மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க