• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு பரிசீலனை துவக்கம்

February 5, 2022 தண்டோரா குழு

கோவையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள சூழலில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த மாதம் 28ம் தேதி முதல் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன.

நேற்று மாலை 5 மணியுடன் வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்தது.கோவை மாவட்டத்தில் மொத்தமாக 4 ஆயிரத்து 524 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும் இன்று காலை 10 மணி முதல் வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக வேட்பாளர்கள் மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் அறிவித்து விதிகளுக்கு உட்பட்டு தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் மற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க