• Download mobile app
09 Jan 2026, FridayEdition - 3621
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயின் வணிக வளாகத்தில் சென்னை பெண் மாரடைப்பால் மரணம்

December 21, 2016 தண்டோரா குழு

துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சத்ய நாராயண ரெட்டி (68), அவருடைய மனைவி வசந்தா ரெட்டி (64) துபாயில் நடைபெற்ற ரோட்டரி கிளப் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருக்க இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் வந்திறங்கிய அவர்கள் டிரா என்னும் இடத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். இதுவே அவர்களுடைய முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.

ரோட்டரி சங்க மாநாடு முடிந்த பின் துபாயைச் சுற்றிப் பார்க்க விரும்பிய அவர்கள் அங்குள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளனர். அந்த வணிகவளாகத்தைச் சுற்றிப் பார்த்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, வசந்தாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் உடனே ஆம்புலன்சை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் இருந்த மருத்துவர்கள் உதவியுடன் வசந்தாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துபாய் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “துபாய் வணிக வளாகத்தைச் சுற்றிப்பார்த்து கொண்டிருந்தபோது அப்பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. வசந்தா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று துபாய் சுகாதார அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்” என்றார்.

ரோட்டரி கிளப்பின் சக ஊழியர் ஒருவர் கூறுகையில், “அவர்களது 39 வருட தாம்பத்திய வாழ்கையில், இதுவே முதல் வெளிநாட்டுப் பயணம். ஆனால், இந்த பயணத்திற்கு மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வந்த சத்யநாராயணன், தற்போது இறந்த அவருடைய மனைவின் உடலுடன் சென்னை திரும்பும் வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது” என்று உருக்கமாகக் கூறினார்.

மேலும் படிக்க