January 31, 2022
தண்டோரா குழு
கோவை ஆலந்தூரை அடுத்த கிராமத்தில் ஒரு ரூபாய் இட்லி விற்பனை செய்து வருபவர் கமலாத்தாள் பாட்டி. இந்த பாட்டி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.
இந்த பாட்டியின் சேவையை பார்த்து
ஆனந்த் மகேந்திரரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாரத் கேஸ் மற்றும் ஹெச் பி கேஸ் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இட்லி அம்மா கமலாத்தாள் தனக்கு மாதம் தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்கி வரும் பாரதப்பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்லவேண்டும் என பாரத பிரதமருக்கு இட்லி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரதப்பிரதமர் இட்லி பாட்டியின் ஆசையை பூர்ர்தி செய்வாரா பொருந்திருந்து பார்ப்போம்.