• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 14 லட்ச ரூபாய் மது அழிப்பு – மது அழிப்பு மதுவிலக்கு போலீஸ் நடவடிக்கை

January 31, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பொள்ளாச்சி நகரம், சுற்று வட்டார கிராமங்கள், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் சட்டவிரோதமாக வெளிச் சந்தைகளில் விற்கப்படும் மது,கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி இடங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி விற்பனைக்காக கொண்டுவரப்படும் மது ஆகிவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட மதுவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, உதவி ஆய்வாளர் ஜான் ஜினியன் சிங், டாஸ்மாக் உதவி மேலாளர் லட்சுமி,காவலர்கள் சுமதி, வனிதா,பெரியசாமி, சரவணக்குமார்,சாந்தகுமார், காளிதாஸ், ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில்,

இந்த ஒரு ஆண்டில் சட்டவிரோதமாக விற்க வைத்திருந்த 10 ஆயிரத்து 446 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட மது நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், வெளிமாநிலங்களில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்கவும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க