• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம்

தண்டோரா குழு
January 31, 2022 புதிய செய்திகள்

கோவை இருகூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ பிரிவும் செயல்பட்டு வருகிறது. இருகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ பிரிவு மற்றும் ரோட்டரி கிளப் ஹெரிட்டேஜ் சார்பில் அங்கு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. இதில், ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ராஜசேகர், துணை ஆளுநர் பாஸ்கர், தலைவர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மூலிகை தோட்டத்தையும் திறந்து வைத்தார்.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக புதிதாக அமைக்கப்பட்ட ‘8’ வடிவ நடைபாதையையும் திறந்து வைக்கப்பட்டது.இந்த மூலிகை தோட்டத்தில் பிரண்டை,நிலாவரை, அறுகம்புல், அந்திமல்லி மற்றும் அரிவாள் மனைப்பூண்டு உள்ளிட்ட வகையான மூலிகைகள் இடம்பெற்றுள்ளன. சித்த மருத்துவம் தேடி வரும் நோயாளிகளுக்கு இந்த வகை மூலிகை செடிகள் உதவும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக், சித்த மருத்துவ அலுவலர்கள் நடராஜன், ரம்யா, சமீர் மருத்துவர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க