• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகள் சங்கம் வரவேற்பு

January 31, 2022 தண்டோரா குழு

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி கூறியதாவது:

நீண்ட காலமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தோம். அதில், சிறு தானியங்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் எனவும் ராகி, கம்பு, தினை, போன்ற சிறுதானியங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பாக்கெட்களில் அடைக்கப்பட்டு அதனை தமிழக அரசு, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் விவசாயிகளிடம் சிறுதானியங்களை வாங்கி, அனைத்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட உள்ளது என்று. இந்த திட்டத்தை கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க