• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்னூரில் இளைஞர் கொலை – இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குட்டி என்ற ராஜேந்திரன் உட்பட நால்வர் கைது

January 29, 2022 தண்டோரா குழு

அன்னூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குட்டி என்ற ராஜேந்திரன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சரவணன்(வயது 19).இவர் சிட்பண்ட்ஸ் நடத்தி வந்துள்ளார்.இந்து முன்னணியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் தான் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நேற்று அன்னூரை அடுத்துள்ள மைல்கல் பகுதியில் வசூலுக்காக நின்று கொண்டிருந்த போது அங்கு டூவீலரில் வந்த பிள்ளையப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் என்கிற பகவான்ஜி (வயது 26).இவரது நண்பர் ராஜராஜன் (வயது 20) உள்ளிட்ட இருவர் இருவரும் கொடுங்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரவணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், சரவணனை வெட்டிய இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சரவணனின் முன்னாள் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்களான இந்து முன்னணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளரான குட்டி என்ற ராஜேந்திரன்(வயது 40) மற்றும் அவரது பங்குதாரரான ரங்கநாதன்(வயது 33) உள்ளிட்டோர் தொழிற்போட்டி காரணமாக வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும்,பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் தனது மகனுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும்,அதனால் முன்னாள் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்களான இருவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உறவினர்,நண்பர்கள் என 20 க்கும் மேற்பட்டோர் அன்னூர் டூ கோவை செல்லும் சாலையில் காவல் நிலையம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இக்கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்ட அன்னூர் போலீசார் கொலையில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வன் ,ராஜராஜன் மற்றும் கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததாக இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் குட்டி என்ற ராஜேந்திரன்,ரங்கநாதன் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் சரவணன் கொலை செய்யப்பட்டதில் தமிழ்ச்செல்வன், ராஜராஜன் இருவருக்கும் நேரடி தொடர்பிருப்பதும்,இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் குட்டி ராஜேந்திரன் மற்றும் பங்குதாரர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கொலை செய்ய தூண்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அன்னூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க