• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேவாலயம் மீது தாக்குதல் – மூன்றாவது நபர் கைது !

January 28, 2022 தண்டோரா குழு

கோவையில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்றாவது நபரை கைது செய்துள்ள போலீசார், மற்றொருவரையும் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான டிரினிட்டி தேவாலயம் உள்ளது. கடந்த 24ம் தேதி இரவு இந்த தேவாலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் செபாஸ்தியர் சிலை மீது தாக்குதல் நடத்தினர்.இதில் செபஸ்தியர் சிலை சேதமான நிலையில்,இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர் கட்டை மற்றும் கற்கலைக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவன் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரை கண்டறிந்து நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தீபக் என்பவரை நேற்று இரவு கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மருதாசல மூர்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு எதிர்வினையாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க