January 27, 2022
தண்டோரா குழு
டீம் ஏ வென்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள வி 3 திரைப்படத்தின் பூஜை கோவை ஹோப்சில் உள்ள உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
அமுதவாணன் இயக்கத்தில்
டீம் ஏ வென்டர்ஸ் நிறுவனம் வி 3 என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பூஜை விழா கோவை ஹோப்சில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. ஏலன் செபாஸ்டியன் இசையமைப்பில் க்ரைம் த்ரில்லர் கதை பின்னனியில் உருவாக உள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் எஸ்தர் அனில், பாவனா கவுடா உள்ளிட்ட நாயகிகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்பட பூஜையில் தயாரிப்பாளரும், பப்பு வா நியூ கினியா நாட்டின் இந்திய நாட்டின் வர்த்தக ஆணையருமான விஷ்ணு பிரபு கலந்துகொண்டு நடிகர், நடிகையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மூன்று இளம் பெண்களை இணைத்து இக் கதைக்களம் உருவாகியுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.