• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் சில நாட்களாக 7 பேரை தாக்கி அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது !

January 27, 2022 தண்டோரா குழு

திருப்பூரில் சில நாட்களாக 7 பேரை தாக்கி அச்சுறுத்தி வந்த சிறுத்தை மாநகருக்குள் புகுந்த நிலையில், அம்மாபாளையம் பகுதியில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதை பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பாப்பான்குளம் பகுதியில், கடந்த 24ம் தேதி சோளத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, வன ஊழியர் உட்பட 6 பேரை தாக்கியது. அந்த சிறுத்தை பெருமாநல்லுார் அருகே நியூ திருப்பூர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றதாக அவ்வழியாக காரில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முழுவதும் பொங்குபாளையத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை அங்கு நாய் ஒன்றை அடித்து பாதி இறைச்சியை சாப்பிட்டது. இந்த நிலையில் அங்கிருந்து வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து தப்பிய சிறுத்தை இன்று (ஜன.,27) அம்மாபாளையம் பகுதியில் ஒரு கம்பெனி வளாகத்தில் புகுந்தது. அங்கு தோட்டத்தொழிலாளி ராஜேந்திரனை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

மேலும் பிரேம் குமார் என்ற வேட்டைத்தடுப்பு காவலரையும் தாக்கிவிட்டு கழிவறையில் முடங்கியது. வனத்துறையினர் கூண்டு, வலை முதலியவற்றுடன் அங்கு சென்று முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க முயன்ற போது, பின்பக்கம் உள்ள ஒரு சோளக்காட்டில் சென்று பதுங்கியது. தேடுதல் வேட்டையின் போது அங்கு கண்காணிப்பில் இருந்த வனத்துறை அலுவலர் ஒருவரையும் அந்த சிறுத்தை தாக்கியது.

இதையடுத்து, அம்மாபாளையம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர், முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை கண்டறிந்து அதற்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். 2 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் முட்புதரை சுற்றிவளைத்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் பிடித்தனர். இதை அப்பகுதியினர் திரண்டு பார்வையிட்டனர்.

பின்னர் மயக்கநிலையில் கூண்டுக்குள் ஏற்றி எடுத்துச்சென்றார்கள். சிறுத்தை காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க