• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“இந்த ஆட்டம் போதுமா? கொழந்த” – கோவையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர் !

January 26, 2022 தண்டோரா குழு

“இந்த ஆட்டம் போதுமா? கொழந்த” தமிழ்நாட்டில் குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்து கோவையில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இன்று 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் டெல்லில் நடைபெறும் மாநில வாகனங்கள் அணிவகுப்பில் தமிழ்நாடு வாகனத்திற்கு சில அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் சென்னையில் அணிவகுப்பு நடத்தும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன் படி சென்னையில் வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் “இந்த ஆட்டம் போதுமா? கொழந்த…” என திமுக வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கோவை மாநகர் கிழக்கு மண்டலம் பெரிய கடை வீதி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போஸ்டரில் சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்களும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, முதல்வர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க