• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் மூலம் தினமும் 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை

January 24, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் மூலம் தினமும் 27 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13.5 லட்சம் லிட்டர் பால் வினியோகிக்கப்படுகிறது.

கொரோனா முழு ஊரடங்கின்போது பால் வினியோகத்திற்கு தடை இல்லை என்றாலும் கடைகள் மூடப்பட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.கடந்த 3 வார ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம் லிட்டர் பால் விற்பனை குறைந்தது.

சென்னையில் மட்டும் 70 ஆயிரம் லிட்டர் ஆவின்பால் வினியோகம் பாதித்தது. ஆனால் சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. சென்னையில் வழக்கத்தைவிட கடந்த 3 சனிக்கிழமைகளில் தலா 80 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

அதாவது 14.30 லட்சம் லிட்டர் ஆவின்பால் சனிக்கிழமைகளில் விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
சனிக்கிழமைகளில் கூடுதலாக விற்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக விற்கப்படும் அளவை விட குறைவாகவே விற்பனை நடந்துள்ளதாக ஆவின் பால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க