• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதாகைகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கோவை சிறுவன் !

January 22, 2022 தண்டோரா குழு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிறுவன் பதாகைகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் முகுந்தன். இந்த மாணவன் தனது தாத்தா தேவராஜ்-உடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

மேலும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்றிருந்தார்.

அந்த பதாகைகளில் “உலக தமிழர்களின் குரல். அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா! சுதந்திர இந்தியாவில் தான் தமிழகம் உள்ளது. அதை யாரும் மறுப்பதில்லை. தேர்வு குழு அனுமதி மறுத்தாலும் இந்த ஒப்பற்ற தலைவர்களை உலக த்தமிழகர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது” என்று எழுதியிருந்தது.

இதுகுறித்து தேவராஜ் கூறுகையில்,

“தொடர்ந்து இதுபோன்ற சமூக விழிப்புணர்வு செயல்களை நாங்கள் செய்து வருகிறோம். அந்த வகையில் முகுந்தன் தமிழகத்தை சேர்ந்த அணிவகுப்பு வாகனங்களுக்கு குடியரசு தினவிழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கண்டிப்பாக குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக உறுதி இடம் பெறவேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க