கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் 12 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24 லேப் டெக்னீசியன்கள் மற்றும 12 ஓட்டுனர் – பணியிடங்கள் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி http://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதிக்கான கையொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்கள், முன் அனுபவ சான்றிதழ்கள், மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் ரேஸ்கோர்ஸில் உள்ள துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம் மேற்படி பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு