• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் மனு

January 20, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மனு அளித்தார்.

கோவை மாநகராட்சியில் சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அவர்,

கோவை மாநகர மன்றம் தேர்வு செய்யபடாத காலத்திலே, அண்ணா திரவிட கழகம் இருந்த காலத்தில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகாள ஒப்பந்ததில் அமல்படுத்த தீர்மானிக்கபட்டு பணிகள் ஆரம்பிக்கபட்டது என்றும், அன்றைய தினம் எதிர்கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து சூயஸ் க்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்ததாக தெரிவித்தார்.

பல இடங்களில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் இடத்தில் சூயஸ் நிறுவனத்தினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்ததாகவும் கூறினார். கோவை நகரத்தின் குடிநீர் என்பது அரசினுடைய குடிநீர் வாரியத்தின் மூலமாகவே செய்யப்பட வேண்டுமே தவிர தனியார் நிறுவனங்களால் செய்யப்பட கூடாது என கூறினார். மேலும் இந்தியாவிலேயே எந்த நகரத்திலும் இது இல்லை என்ற நிலையில் கோவையில் அதிமுக இந்த ஏற்பாட்டினை செய்ததாகவும் தெரிவித்தார்.

ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமில்லாமல் திமுக தேர்தல் அறிகையில் கூறியது போல ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். மேலும் இது குறித்து அமைச்சர் இடத்திலும், கூறியுள்ளதாக தெரிவித்த அவர் சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடந்து போராடும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க