January 19, 2022
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் 28வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சுபாராவ் வரவேற்புரையாற்றினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
தற்போது பட்டம் பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தின் போது மக்களுக்கு சேவையாற்றிவர்கள். வருங்காலங்களில் மக்களுக்கு மருத்துவத் துறையில் சேவையாற்றி, சிறந்து விளங்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 148 பேருக்கும், முதுகலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 69 பேருக்கும் பட்டங்கள் வழங்கினார்.
தங்கப்பதக்கம் வென்ற 22 பேருக்கும், அகாடமி அவார்டு வென்ற 18 பேரும் கவுரவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த மாணவ, மாணவிகள் பிரனீதா , பாலசந்தர் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் மருத்துவக் கல்லூரி
பேராசிரியர்கள் தீபலட்சுமி, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார்.