January 18, 2022
தண்டோரா குழு
கோவை சாய்பாபாகாலனி காமராஜர் வீதியை சேர்ந்த 29 வயதான தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் வாலிபர், சாய்பாபா காலனி போலீசில் அளித்த புகாரில், தனக்கும் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் யாருமில்லாத நேரத்தில் அடிக்கடி சந்தித்து பேசி இந்த விவரம் அவரது கணவருக்கு தெரியவந்ததால் அவர் என்னை கண்டித்தார்.
பின்னர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்தார். இந்த வீடியோவை பேஸ்புக் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிடப் போகிறேன் என மிரட்டி வந்தார். இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால் சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். இல்லாவிட்டால் உனது ஆபாச வீடியோ வெளியாகும் என மிரட்டினார். அவருடன் மேலும் சிலரும் சேர்ந்து என்னை பணம் கேட்டு மிரட்டினார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீட்டர் (30), ஜிதின் (25) ஆகியோரை கைது செய்தனர்.