• Download mobile app
11 Aug 2025, MondayEdition - 3470
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக பக்தர்களின்றி தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

January 18, 2022 தண்டோரா குழு

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக பக்தர்களின்றி தைப்பூச திருநாள் கொண்டாடப்பட்டது.

தை பூச விழாவின் போது பக்தர்கள் முருகனை எண்ணி மாலையணிந்து விரதமிருந்து காவடிகளை எடுத்தோ, பாதையாத்திரை மேற்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி மலைக்கோவிலில் தைபூச திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டு தோறும் மிக விமர்சையாக கொண்டாடபடும். ஆனால் இம்முறை கொரோனா கட்டுபாடுகளால் பக்தர்களின்றி கொண்டாடப்பட்டது.

பூக்களால் அலங்கரிப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய முருகனுக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. குருக்கள் வள்ளி, தெய்வானைக்கு மங்கல் நாண் அணிவித்தனர். தொடர்ந்து முருகனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, திருப்புகழ் பாடலுடன் உரல் இடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் முருகன் வள்ளி தெய்வானை ரதத்தில் வளம் வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் கோவில் குருக்கள், ஊழியர்கள், பாதுகாப்பிற்காக வந்திருந்த காவலர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் அடிவாரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மலைப்பாதைக்கு செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் வாகனப்பாதை அடைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க