• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலையில் கல்லை போட்டு ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை

January 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே பச்சாபாளையம் ஊராட்சியை சேர்ந்த நாதேகவுண்டன்புதூரில், ஊருக்கு ஒதுக்குப்புறமான சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில்,அதே ஊரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜ் (56) இறந்து கிடந்தார்.

அவர் உடலுக்கு அருகே காலி மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஆகியவை கிடந்தன. அவருடைய தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி காயங்கள் இருந்தன. மேலும் தாக்க பயன்படுத்தப்பட்ட கல் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் முதல்கட்ட விசாரணை இருசக்கர வாகனத்தில் மற்றொருவருடன் வந்து இங்கு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இறந்த நடராஜ் சூலூரை சேர்ந்த ஒருவரிடம் கூலிக்கு ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். சம்பவ இடத்தில் மேட்டுப்பாளையம் போலீஸ் டிஎஸ்பி பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் கோவையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். இரு நபர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க