January 17, 2022
தண்டோரா குழு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் வானிலையை சென்னை வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கிறது.அந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக் கண்ணன் இதற்கு முன்பு காலநிலை மைய இயக்குநராக இருந்தவர். தற்போது அந்தப் பதவி புவியரசனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.