January 15, 2022
தண்டோரா குழு
மின் வினியோக செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை வடக்கு வட்ட வடமதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் (மேற்கு) பகுதியில் நிர்வாக காரணங்களால் இந்த மாதம் மின் கணக்கீட்டு பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மத்தம்பாளையத்தில் 2091, செல்வபுரத்தில் 1065, பிளிச்சியில் 361 இணைப்புகள் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது கடந்த நவம்பர் மாத மின்கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது மின் மீட்டரில் உள்ள மின் அளவை புகைப்படம் எடுத்து தெரிவித்தால் அந்த அளவை ஏற்றுக்கொண்டும் கட்டணம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.