• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

January 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,

முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மாவட்டங்கள் தோறும் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் ஆய்வுக்கூட்டம் அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. இங்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில், அரசு நிர்வாகத்தின் சார்பில் 7368 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் 4691 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவை மாவட்டத்தில் 12059 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் மொத்தம் 4397 ஆக்சிசன் படுக்கைகள், தீவிர சிகிச்சையில் 853 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் அதனை உடனடியாக தயார் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

கோவையை பொருத்தவரை 27 லட்சத்து 90 ஆயிரத்து400 பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நிலையில் 27 இலட்சத்து 2, 946 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மீதும் உள்ள 87,454 பேருக்கு இல்லங்களில் தேடிச்சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது. 81 விழுக்காடு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 7000 முதல் 9000 வரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதனை 12,000 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 11 சோதனைச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கவனிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்களுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகளில் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதைப்போல மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் 100 சிறப்பு அலுவலர்கள், 33 பேரூராட்சி களுக்கும் 33 சிறப்பு அலுவலர்கள், 7 நகராட்சிகளுக்கும் 7 சிறப்பு அலுவலர்கள், 12 ஊராட்சிகளுக்கும் 12 சிறப்பு அலுவலர்கள் என 152 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாட்ஸ் அப் குழு மூலம், தகவலை பகிர்ந்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கோவையில் தடுப்பு நடவடிக்கைகளில் 2206 மருத்துவ பணியாளர்கள் தற்போது உள்ள நிலையில் அவர்களுக்கு 2 மாதம் கூடுதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் 1105 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு 3311 மருத்துவ பணியாளர்கள் தற்பொழுது உள்ளனர். மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். கோவையில் 15-18 வயதுடையவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 752 பேர் மட்டுமே தற்போது வரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் ஊரடங்கு போடப்பட்டுவதால் அதற்கு முந்தைய தினம் அதிகமாக மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் இயன்றவரை தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடைகளை பொருத்தவரை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி நடைமுறைகள் செயல்படுத்தப்படும். கோவையிப் 70,950 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டியவர்கள், 1671 பேர் தற்போது வரை செலுத்திக் கொண்டு உள்ளனர்.

ஒமிக்ரான் பரிசோதனை செய்ய அரசின் சார்பில் 2 லேப் தற்போது உள்ளது. தனியார் லேப்கள் 28 உள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கும் தடுப்பூசி தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் ஆலோசனை செய்வதாக கூறி உள்ளனர் அவர்கள் கலந்தாலோசனை செய்து விட்டு கூறினால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு எடுக்கும் என தெரிவித்தார்.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணா கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் இருந்து வரும் சிசிடிவி நேரலை கட்சிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உட்பட மருத்துவத் துறை காவல் துறை ஆகிய அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க