• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் மேம்பாலம் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரம்

January 10, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் – ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மேம்பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வளையார் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு உக்கடம்-ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது.

முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 55 தூண்கள் அமைக்கப்பட்டு ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதனிடையே கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் மேம்பால பணிகளுக்காக தமிழக அரசு ரூ.265 கோடி நிதி ஒதுக்கியது. இந்த இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு ஆண்டிற்குள் முடிக்க ஒப்பந்ததாரரிடம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மூன்று இடங்களில் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன. போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்துநிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன.

பொள்ளாச்சியில் இருந்து வரும் வாகனங்கள் போத்தனூர் பிரிவு இறங்குதளத்தை பயன்படுத்தி டவுன்ஹால் செல்லலாம், உக்கடம் பேருந்துநிலையம் இறங்குதளம் மூலம் சுங்கம் பைபாஸ் செல்லலாம், ஆத்துபாலம் இறங்குதளம் மூலம் பாலக்காடு சாலை செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும், வாகன ஓட்டிகளும் பயன் அடைவார்கள்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலம் முதல் கட்ட பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே இறங்கு தளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளை இன்னும் ஒரு ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உக்கடம் – ஆத்துபாலம் மேம்பால பணிகள் முழுமையாக இன்னும் ஒரு அண்டிற்குள் முடிக்கப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க