• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூய்மை பணியாளர் மீது தாக்குதல் நடத்தியவரை தட்டி கேட்டவர்கள் மீது வழக்குபதிவு – மாநகராட்சி ஆணையரிடம் மனு

January 10, 2022 தண்டோரா குழு

தூய்மை பணியாளர் மீது தாக்குதல் நடத்தியவரை தட்டி கேட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ரங்கேகவுண்டர்வீதி, காட்டான் சந்து என்ற இடத்தில் வட மாநில மக்கள் அதிகம் குடியிருந்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அங்குள்ள வீடுகளில் குப்பைகளை சேகரிக்க சென்ற ஜோதியம்மாள்(51) என்ற துப்புரவு பணியாளர்,வினோத் ஜெயின் என்பவர் இல்லத்தின் குப்பைகளில் குட்கா மற்றும் பிளாஸ்ட்டிக் கவர்கள் மக்கும் குப்பையில் கொட்டியிருந்துள்ளது.

ஜோதியம்மாள் அவரிடம் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து அளிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு வினோத் மறுப்பு தெரிவித்திட இருவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வினோத் ஜோதியம்மாளை குப்பை தொட்டியை கொண்டும் காபி பிளாஸ்கினாலும் தாக்கியுள்ளார். இதனால் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாநகராட்சியில் பணி புரியும் நிரந்தர ஒப்பந்த பணியாளர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவதன்று பாதிக்கப்பட்ட நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும்,இது போன்று சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவின் போது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார்,உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க