January 10, 2022
தண்டோரா குழு
நேர்கொண்டபார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார், ஹெச். வினோத் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்
இப்படம் வரும் 13 – ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், பொங்கலுக்கு “வலிமை” படம் வெளியாகாததால்,விரக்தியில் நடிகர் அஜித் ரசிகர்கள் சார்பில் கோவை நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அடங்காதவன் அஜித் குருப்ஸ் என்ற பெயரில் “மனசு ரொம்ப வலிக்குது” என்று பெரிய அளவில் அச்சிடப்பட்ட போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.