• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு அனுமதி !

January 8, 2022 தண்டோரா குழு

ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பரவலை தடுப்பதற்காக , அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு . நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க