• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாளை 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் – கோவை கமிஷனர்

January 8, 2022 தண்டோரா குழு

கொரொனானா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை கண்காணிக்க 44 இருசக்கர வாகனங்கள் மற்றும் 23 நான்கு சக்கர வாகனங்களிலும் ரோந்து பணியும் மேற்கொள்ளப்படும். மேலும் மாநகர் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மாநகரில் 30 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படும். மேலும் மாநகர் எல்லைகளில் 11 நிரந்தர சோதனைச்சாவடிகள் உள்ளன.மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. ஆனால் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் அணிந்து கொள்ள முகக்கவசம் வழங்கப்படும்.மாநகர போலீசாரிடம் தேவையான முகக்கவசங்கள் இருப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க